நான்காம் பாவகாதிபதி பன்னிரு பாவகங்களில் ஏற்படுத்தும் மனையோகம்





1. ஜனன ஜாகத்தில் நான்காம் வீட்டின் அதிபதி 1- ஆம் வீட்டில் இருப்பின் அவர்களுக்கு எப்படியும், வீடு, மனை யோகங்கள் சித்தியாகும்சுக்கிரனும், செவ்வாயும் நன்கு அமைந்திருப்பின் செல்வச் செழிப்பும் ஏற்படும்எங்கு குடியிருந்தாலும் நல்ல சூழ்நிலையில் வாழக்கூடிய யோகம் உண்டு.
2.   ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் அதிபதி 2 ஆம் வீட்டில் அமைந்திருப்பின் இயற்கையாகவே நல்ல வீடு, வாசல் அமைந்து விடும்இளவயது முதலே நன்மைகளை அடைவர், தனது கல்வி கேள்வியாலோ, தாய்வழி உறவிலோ வீடு, வாசல் அமைத்துக்கொள்ளும் யோகம் உண்டு.
3.   ஜன்ன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் அதிபதி, 3 ஆம் வீட்டில் இருப்பின் சொத்து சுகம் அமைவது சிரம்ம், வாழ்க்கைத் துணைவரால் வீடு, வாசல் இழப்பு நேரக்கூடும்இத்தகைய அமைப்புடையவர்களுக்கு 4 ஆம் வீட்டிலோ வலிமை பெற்று கிரகங்கள் அமைந்திருப்பின், அக்கிரகங்களின் திசாபுத்தி நடைபெறும் காலம் வீடு மனை யோகம் சித்தியாகும்.
4.   ஜனன  ஜாதகத்தில் நான்காம் வீட்டில் அதிபதி அந்த வீட்டிலேயே அக்கிரகத்தின் திசை நடைபெறும் காலத்தில் வீடு, வாசல் ஏற்படும்ஆனால் பெற்றோர்களுக்கு சிறப்பிருக்காது.
5.   ஜனன ஜாதகத்தில் 4 க்குடைய கிரகம் 5 ஆம் வீட்டில் இருப்பின் சொத்து சுகம் ஏற்படும்ஆனால் குழந்தைகளின் எதார்த்தமான நடவடிக்கைகளால் சொத்து பின்னம் ஏற்ப வாய்ப்புண்டு.
6.   ஜனன ஜாதகத்தில் 4 க்குடைய 6 ஆம் வீட்டில் அமைவது கெட்ட அமைப்பாகும்நிலையான சொத்து சுகம் இருப்பினும் வீட்டில் சச்சரவுகள் இருந்து வரும்பல இடங்களில் குடியிருக்க வேண்டி வரும். சொத்து சுகம் அடமானம் வைக்க நேரிடும்கடன்கள் மூலம் அவதியுண்டுஉடல் நலிவு ஏற்படும்இத்தகைய அமைப்புடையவர்கள், மற்றவர்கள் பெயரில் சொத்து, சுகம் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
7.   ஜனன  ஜாதகத்தில் 4 க்குடைய கிரகம் 7 ஆம் வீட்டில் இருப்பின் நிச்சயம் வீடு மனை யோகம் உண்டுதிருமணக் காலத்திற்குப்பின் வீடு, வாசல் அமையும்.  7 ஆம் வீட்டில் எத்தனை கிரகங்கள் சேர்ந்துள்ளனவோ அத்தனை வீடுகள் கட்டி வாழலாம்கெட்ட கிரகங்கள் சேர்க்கை இருப்பின், ஒன்றிரண்டு வீடுகள் சேதாரம் ஆகும்.
8.   ஜனன ஜாதகத்தில் 4 க்குடைய கிரகம் 8 ஆம் வீட்டில் இருப்பின் சொத்து பின்னம் ஏற்படும்சொந்த வீடு உண்டானால், அக்காலம் முதல் பல வழிகளில் தொந்தரவு வரும்வாழ்க்கைத் துணைவர் பெயரில் வீடு கட்டிக் கொள்வது நல்லது.
9.   ஜனன ஜாதகத்தில் 4 ஆம் வீட்டின் அதிபதி 9 இல் இருப்பின் சொந்த வீடு வாசல் அமையும்அல்லது மூதாதையர் சொத்துக்கள் இருக்கும்ஆனால் ஜாதகர் அவ்வீட்டில் குடியிருப்பது நெடுங்காலம் நீடிக்காதுபெரும்பாலும் உறவினர்கள் அவ்வீட்டை அனுபவிப்பர்.
10. ஜனன ஜாதகத்தில் 4 ஆம் வீட்டில் அதிபதி 10 ஆம் வீட்டில் இருப்பின் சுய முயற்சியாலோ தாய் தந்தையரது உதவியாலோ வாழ்க்கைத்துணைவரின் சம்பாத்தியம் மூலமோ, நிச்சயம் வீடு மனை யோகம் அமையும்.
11.  ஜனன ஜாதகத்தில் 4 ஆம் வீட்டில் இருப்பின் ஒன்றை இழந்து ஒன்றைப்பெற வேண்டும்இக்கிரகத்தின் திசை அல்லது புத்தி நடைபெறும் காலம் வீடு, வாசல் அமையும்.

12.  ஜனன  ஜாதகத்தில் 4 ஆம் வீட்டில் அதிபதி 12 ஆம் வீட்டில் இருப்பின், சொத்து விரயம் ஏற்படும்ஆனால் இக்கிரகத்தின் திசையில்புதிய வீடு கட்டும் யோகமும் உண்டு.  4 ஆம் வீட்டின் அதிபதி வக்ரம் பெற்று அமைந்திருப்பின் கட்டிய வீடு நிறைவடையாதுபாதியில் நின்றுவிடும், பெரு முயற்சிக்குப் பின்னர் கட்டி முடிக்கும் யோகம் வரும்.

No comments:

Post a Comment